ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸஸ் முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் “இத்தேர்வு விண்ணப்பங்களில் ஆண், பெண் தவிர மூன்றாம் பாலினம் பற்றி குறிப்பிடப்படவில்லை, இதனால் திருநங்கைகள் விண்ணப்பிக்க முடியவில்லை” என்று கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் முக்தா குப்தா, பி.எஸ்.தேஜி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினம் பற்றி குறிப்பிடாதது ஏன்? திருநங்கைகளை தகுதி நீக்கம் செய்ய விரும்புகிறீர்களா?” என்று மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து நாளைக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மற்றும் மத்திய பணி யாளர் நலத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.