இந்தியா

ஜெயலலிதா வழக்கில் பணியாற்றிய லஞ்ச ஒழிப்பு இயக்குநருக்கு 3-வது முறை பணி நீட்டிப்பு

செய்திப்பிரிவு

மதுரையை சேர்ந்த குணசீலன் 1985-ல் குரூப் -1 தேர்வெழுதி, முதல் முயற்சியிலே டிஎஸ்பி, ஆனார். இவர் சென்னை மாநகர இணை ஆணையாளராக‌ (தெற்கு) பணி யாற்றியபோது பரபரப்பாக பேசப் பட்ட 'சைக்கோ' கொலையாளியை துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித் தார். கடந்த 2011-ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத் தில் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் தினமும் ஆஜராவார். ஜெயலலிதா வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் 31.5.2013 அன்று ஓய்வு பெற்றார். ஆனால், அடுத்த ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டார். இதே போல கடந்த ஜூன் 1,2014 முதல் மே 31,2015 வரை 2-ம் முறை யாக, பெங்களூரு வழக்கின் சிறப்பு பணி அதிகாரியாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இவர் கட‌ந்த மே 31-ம் தேதி ஓய்வு பெறவிருந்தார்.ஆனால், சொத்துக்குவிப்பு வ‌ழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல இருப்ப தால், ஜூன் 1,2015 முதல் மே 31,2016 வரை 3-வது முறையாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி குணசீலனுக்கு பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கின் சிறப்பு பணி அதிகாரியாக குணசீலன் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி நீட்டிப்பு வழங்கப்பட் டுள்ள நிலையில் குணசீலன், வழக்கு தொடர்பான ஆவணங் களைக் கோரி கர்நாட‌க உயர்நீதி மன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.

          
SCROLL FOR NEXT