இந்தியா

ரம்ஜான் நோன்பு துவக்கம்: முஸ்லிம்களுக்கு மோடி வாழ்த்து

பிடிஐ

ரம்ஜான் நோன்பு இன்று (வியாழக்கிழமை) தொடங்குவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "முஸ்லிம் மக்களுக்கு என் வாழ்த்துகள். இந்த ரம்ஜான் அனைத்து மக்களுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் நல்கட்டும். ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளப்படும் இந்த புனித மாதத்தில் சமுதாயத்தில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி உருது மொழியிலும் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT