இந்தியா

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் மே 11-ல் தீர்ப்பு?

செய்திப்பிரிவு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் வரும் 11-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெய லலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த மார்ச் 11-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதை யடுத்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில் அரசு சார்பில் பவானி சிங் ஆஜரானது செல்லாது என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தர விட்டது. இதைத் தொடர்ந்து ஆச் சார்யா அரசு வழக்கறிஞராக நியமிக்கப் பட்டார். அவர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் வரும் 11-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சமூக வலைத்தளமான ட்விட்டரில், மே 11-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT