நாளந்தா பல்கலைக்கழக வேந்தராக சிங்கப்பூர் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ பதவியேற்க உள்ளார்.
இதனை வெளியுறவு அமைச் சகம் நேற்று உறுதி செய்தது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், ட்விட்டர் வலைதளத்தில் செய்துள்ள பதிவில், “சிங்கப்பூர் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ, நாளந்தா பல்கலைக்கழக புதிய வேந்தராக பொறுப்பேற்க உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஜார்ஜ் இயோவும் ஒருவர். பல்கலைக்கழகத்தின் 12 உறுப்பினர் நிர்வாக கமிட்டியில் இவரும் இடம்பெற்றுள்ளார்.
தற்போது நாளந்தா பல்கலைக்கழக வேந்தராக பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் பதவி வகிக் கிறார். இவரிடமிருந்து வேந்தர் பொறுப்பை ஜார்ஜ் இயோ ஏற்கிறார்.