இந்தியா

அரசியல் காரணங்களுக்காகவே மேகேதாட்டு அணையை தமிழக அரசு எதிர்க்கிறது: சித்தராமைய்யா

பிடிஐ

வெறும் அரசியல் காரணங்களுக்காகவே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் புதிய மெட்ரோ ரயில் தடத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமைய்யா, "நேற்று (வியாழக்கிழமை) மேகேதாட்டு பிரச்சினை தொடர்பாக எனது தலைமையில் அனைத்துக் கட்சி குழு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது.

சந்திப்பின்போது, காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதன் அரசியல் காரணங்கள் மட்டுமே இருக்கிறது என தெளிவுபட எடுத்துரைக்கப்பட்டது.

நான் இப்போதும் கூறுகிறேன் மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு தேவையில்லாமல் எதிர்க்கிறது.

இத்திட்டத்தை தமிழக அரசு எதிர்ப்பதற்கு காரணங்களே இல்லை. மேகேதாட்டுவில் அணை கட்டுவதால் தமிழக விவசாயிகளுக்கோ அல்லது அவர்களது விளை நிலங்களோ எந்த வகையிலும் பாதிப்பு இருக்காது.

மேகேதாட்டு அணையை கட்டுவதில் கர்நாடகா அரசு இப்போதும் உறுதியாக இருக்கிறது" என்றார்.

SCROLL FOR NEXT