காஷ்மீரில் கண்ணிவெடியில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் எல்லைக் கோட்டருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் தவறுதலாக கண்ணி வெடியில் கால் வைத்துவிட்டார். கண்ணிவெடி வெடித்ததில் அவர் தூக்கி எறியப்பட்டார்.
உடனடியாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல்நலன் தேறி வருவதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.