‘‘ராணுவத்தில் ஒரே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பேன்’’ என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
ராணுவத்தில் ஒரே பதவியில் ஒரே கால அளவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூ தியத்தில் வித்தியாசம் காணப் படுகிறது. ராணுவத்தில் பதவி, பணி செய்த ஆண்டுகள் ஒன்றாக இருந்தாலும், அவர்கள் வெவ்வேறு தேதிகளில் ஓய்வு பெறுவதால் ஓய்வூதியத்திலும் வேறுபாடுகள் இருந்தன. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஓய்வு பெற்ற தேதியைக் கணக்கில் கொள்ளாமல், ‘ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம்’ (ஓஆர்ஓபி) என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் பல ஆண்டுகளாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி யின் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரி வினர், டெல்லியில் நேற்று ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது:
முந்தைய காங்கிரஸ் தலை மையிலான அரசு, ஓஆர்ஓபி திட்டத்தை அமல்படுத்த உத்தர விட்டது. அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு அந்தத் திட்டத்தை அமல்படுத்தாமல் உள்ளது. பாஜக அரசு பதவியேற்று ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால், ஓஆர்ஓபி திட்டத்தை அமல் படுத்தாமல் காலம் தாழ்த்தி வரு கிறது. ராணுவ வீரர்களைின் கோரிக் கைகளை நிறைவேற்றி வைக்க வேண்டியது நமது கடமை. இந்தத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த மத்திய அர சுக்கு நான் கடும் நெருக்கடி கொடுப்பேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.