பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங் களில் இருந்து கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் 456 குழந்தைகள் கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்தில் வந்திறங்கினர். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை பாலக்காடு ரயில் நிலையத்துக்கு வந்த பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 456 குழந்தைகள் மற்றும் 50 பெரியவர்கள் இறங்கினர்.
அந்தக் குழந்தைகள் பிஹாரில் இருந்து கடத்தி கொண்டு வரப் படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ரயில்வே போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
குழந்தைகளை அழைத்து வந்தவர்களிடம் விசாரித்த போது, அனைத்து குழந்தை களும் கோழிக்கோடு அருகே யுள்ள அரபி பள்ளியில் படிப்பவர்கள் என்றும் சொந்த மாநிலமான பிஹாருக்கு சென்று விட்டு மீண்டும் கோழிக்கோடு திரும்பிக் கொண்டிருப்பதாக வும் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது சில குழந்தை களிடம் மட்டுமே அரபி பள்ளி யில் படிப்பதற்கான அடையாள சான்று இருந்தது. பெரும்பாலான குழந்தைகளிடம் எவ்வித ஆவணமும் இல்லை.
இதைத்தொடர்ந்து 456 குழந்தைகளையும் மீட்ட போலீஸார் அவர்களை சமூக நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த குழந்தை கள் தற்போது மாவட்ட நிர்வாகத் தின் பொறுப்பில் உள்ளனர்.
பாலக்காட்டில் உள்ள முட்டிக் குளங்கரை எனப்படும் தனியார் இல்ல மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய புலனாய்வு போலீஸாரும் ரயில்வே போலீஸாரும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
310 சிறுவர்களிடம் விசாரணை
இதுகுறித்து ரயில்வே போலீ ஸார் கூறியபோது, முறையான சான்றிதழ் வைத்துள்ள சிறார்களை மட்டும் சம்பந்தப்பட்ட அரபி பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு மீதமுள்ள சுமார் 310 சிறுவர்களிடம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங் களில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை சட்ட விரோதமாக கேரளாவுக்கு அழைத்து வந்திருப்பதாகக் சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்தும் கேரள சமூக நலத்துறை சார்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.