இந்தியா

சட்டப்பேரவைத் தேர்தலில் இணைந்து செயல்பட ஜிதன்ராம் மாஞ்சிக்கு லாலு பிரசாத் அழைப்பு: பாஜகவை வீழ்த்த வியூகம்

பிடிஐ

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான போரில் ஒருங்கிணைந்து செயல்பட வருமாறு அம்மாநில முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சிக்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பதற்காக, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உட்பட ஜனதா கட்சி யிலிருந்து பிரிந்த 6 கட்சிகள் மீண்டும் ஒன்றாக இணையப்போவ தாக அறிவித்துள்ளன. இந்நிலை யில் இந்த ஜனதா பரிவார் அமைப் பின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பாட்னாவிலி ருந்து நேற்று டெல்லிக்கு புறப் பட்ட லாலு பிரசாத் யாதவ் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

அடுத்த சில மாதங்களில் பிஹார் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்துவதற்காக, முன்பு எதிரும் புதிருமாக இருந்த லாலு, நிதிஷ் கட்சிகள் ஜனதா பரிவார் அமைப்பின் கீழ் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இந்தக் கூட்டணியில் ஜிதன் ராம் மாஞ்சி உட்பட யார் வேண்டுமானாலும் இணையலாம்.

ஜனதா பரிவார் அமைப்பில் தங்கள் கட்சியை இணைத்துக் கொள்வதா அல்லது கூட்டணிக் கட்சியாக இணைவதா என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ள லாம். ஆனால், பாஜகவுக்கு எதிரான போரில் அனைவரும் இணைய வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஜிதன்ராம் மாஞ்சியை ஜனதா பரிவார் கூட்ட ணியில் சேர்க்க ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் வசிஷ்ட நாராயண் சிங் செய்தியாளர்களிடம் கூறும் போது, “பாஜகவுடன் தொடர்பு வைத்துள்ள மாஞ்சியை ஜனதா பரிவார் கூட்டணியில் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்றார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதை யடுத்து, தோல்விக்கு பொறுப் பேற்று பிஹார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, தனது விசுவாசியாக இருந்த ஜிதன் ராம் மாஞ்சியை முதல்வர் பதவியில் அமர்த்தினார் நிதிஷ். ஆனால் அடுத்த சில மாதங் களில் நிதிஷுக்கு எதிரான நடவடிக் கையில் இறங்கினார் மாஞ்சி.

இதையடுத்து, ஐக்கிய ஜனதா தளத்தலிருந்து நீக்கப்பட்டதால் மாஞ்சி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தனிக்கட்சி தொடங்கி உள்ளார். இவர் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதாகக் கூறப்படும் நிலையில், லாலு அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத் தக்கது.

SCROLL FOR NEXT