இந்தியா

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் மாணவி மர்ம சாவு

ஆர்.ஷபிமுன்னா

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண், நேற்று முன்தினம் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பல்கலைக்கழகத்தின் இந்தி துறையில் ஆய்வு மாணவியாக இருந்தவர் அஸ்மா ஜாவித் (30). இவர், கடந்த 2011-ல் பல்கலைக் கழக மாணவ பேரவை தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண். 2013-ல் இந்தி துறையின் முனைவர் பட்டம் பெற்ற பின் அலிகர் நகரில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக அஸ்மாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இது பற்றி அருகிலுள்ளவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித் தனர். இதை அடுத்து போலீஸார் பூட்டை உடைத்து உள்ளே நுழைந் தனர் அங்கு அஸ்மா பிணமாக கிடந்தார்.

இது குறித்து அஸ்மாவின் சகோதரர் சல்மான் ஜாவித் கூறுகை யில், `கடந்த சனிக்கிழமை முதல் அஸ்மாவின் செல்போன் அணைக் கப்பட்டிருந்தது.

அஸ்மாவின் கணவர் திருமண மான சில மாதங்களில் பணியின் காரணமாக வட அமெரிக்காவிற்கு சென்றார். பிறகு தொடர்பு கொள்ளவில்லை. இதனால், மனநலம் பாதிக்கப்பட்டிருந்தவர் லக்னோவில் உள்ள மனநல மருத்துவரிடம் அஸ்மா சிகிச்சை பெற்று வந்தார்.’ எனத் தெரிவித்தார்.

அலிகர் முஸ்லிம் பல்கலை கழகத்தில் எம்.ஏ பயின்ற போது அஸ்மா, பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு போராட்ட மும் நடத்தினார். இதற்காக அமைக் கப்பட்ட விசாரணைக் குழு அப் பேராசிரியர் மீது தவறு எதுவும் இல்லை என அறிக்கை அளித்திருந்தது. தொடர்ந்து பல்கலை.யில் பெண் உரிமை பற்றி பேசி வந்த அஸ்மா, முதல் பெண்ணாக மாணவர் பேரவை தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர். ஆனால், அஸ்மாவிற்கு இதில் நான்காவது இடம் கிடைத்தது.

அஸ்மாவின் சாவு குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திர காந்த் துவேதி கூறுகையில், `சில மாதங்களுக்கு முன் அலிகரின் ஓட்டல் அதிபர் தம்மை மணமுடிப் பதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்தார். பிறகு அவ்வழக்கை வாபஸ் பெற்று கொண்டார்.

பிரேதப் பரிசோதனையில் அவர், கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதில் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை’ என்றார்.

          
SCROLL FOR NEXT