ஆந்திர அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில்லை என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா குற்றம் சாட்டியுள்ளார்.
சித்தூரில் மாவட்ட ஆட்சியர் சித்தார்த் ஜெயின் தலைமையில் ஜில்லா பரிஷத் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப் பினரும் நடிகையுமான ரோஜா கூறியதாவது:
ஆந்திர அரசின் நலத் திட்டங்கள் சரிவர மக்களைச் சென்றடை வதில்லை. குறிப்பாக, நீர்-மரம் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமூக விரோதிகள் சிலர் ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. ஆக்கிரமிப்பு களை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வனத்துறை அமைச்சர் பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி மனநலம் பாதிக்கப்பட்ட வரைப் போல செயல்படுகிறார். எனவே இவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு ரோஜா தெரிவித்தார்.
முன்னதாக, மக்கள் பிரச்சினை களை அரசு கண்டுகொள்வதில்லை எனக் கூறி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஜில்லா பரிஷத் அரங்கு வளாகத்தில் அமர்ந்தபடி அமளியில் ஈடுபட்டனர். இறுதியில் எவ்வித தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் பொதுக் குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் பொஜ்ஜல கோபால கிருஷ்ணா ரெட்டி, எம்.பி. சிவ பிரசாத், ஜில்லா பரிஷத் தலைவர் கீரவாணி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதி எம்.எல்.ஏ.க்கள், அனைத்து துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.