பிரதமர் மோடி சத்தீஸ்கரின் தந்தேவாடா பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை நேற்றுமுன்தினம் தொடங்கி வைத்தார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டோங்பால் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 500 பேரை மாவோயிஸ்ட்கள் சிறைபிடித்தனர்.
அரசு அதிகாரிகளும் உள்ளூர் சமுதாய தலைவர்களும் மாவோயிஸ்ட்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பேரில் சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் நேற்றுமுன்தினம் இரவு விடுவிக்கப்பட்டனர். எனினும் சதாராம் என்ற கட்டுமானத் தொழிலாளியை மட்டும் மாவோயிஸ்ட்கள் கொலை செய்துவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.