இந்தியா

வேட்டி குறித்து கருத்து: ம.பி. அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம்

ஏஎன்ஐ

வேட்டியை எப்படி கட்ட வேண்டும் என்று காட்ட முடியாவிட்டாலும், அதை எப்படி அவிழ்ப்பது என்று கற்றுத் தர முடியும் என்று ரஷ்ய தலைவர் ஒருவரின் மனைவியிடம் முன்பு ஒரு முறை தெரிவித்தேன் என்று கருத்து தெரிவித்த மத்தியப் பிரதேச அமைச்சர் பாபுலால் கவுருக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஷோபா ஒஜா நேற்று கூறியதாவது:

பாஜக சார்பில் சமீபத்தில் நடைபெற்ற மாநில கருத் தரங்கில் வேட்டி குறித்து அமைச்சர் கவுர் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்து வெட்கக்கேடானது. பெண்களைப் பற்றி இதுபோன்ற இழிவான கருத்துகளை இவர் அடிக்கடி கூறி வருகிறார். இதன்மூலம் பெண்கள் மீது பாஜகவும் அவரும் எத்தகைய மனநிலையைக் கொண்டுள்ளனர் என்பது அம்பலமாகி உள்ளது. இதற்காக கவுர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT