சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நிதி முறைகேடு செய்தது தொடர்பாக நிறு வனர் ராமலிங்க ராஜு அவரது சகோதரர் ராமராஜு மற்றும் 8 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஜாமீன் மனுவை விசாரித்த கூடுதல் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்ற சிறப்பு நீதிபதி எம். லட்சுமணன், இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைப்பதாகக் கூறினார். அத்துடன் ராமலிங்க ராஜு மற்றும் அவரது சகோதரர் ராமராஜு ஆகியோருக்கு தலா ஒரு லட்சம் பத்திரம் மற்றும் அதற்கு இணையாக இரு நபர் உத்தரவாதத்தின் அடிப்படையில் ஜாமீன் அளிக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற 8 பேரும் தலா ரூ. 50 ஆயிரம் ரொக்க பத்திரம் மற்றும் தலா ரூ.50 ஆயிரம் மதிப்புக்கு இரு நபர் உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெறலாம் என தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
தற்போது ராஜு உள்ளிட்ட அனை வரும் சேர்லபள்ளி மத்திய சிறைச்சாலை யில் அடைக்கப்பட்டுள் ளனர். இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்த னர்.
2009-ம் ஆண்டு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற ரூ. 7 ஆயிரம் கோடி நிதி முறைகேடு காரணமாக சத்யம் கம்ப்யூட்டர் மிகப் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்தது.