இந்தியா

மக்களவை அலுவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

பிடிஐ

மக்களவையின் அலுவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 13-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைகிறது.

மக்களவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய இருந்தது. ஆனால் மாநிலங்களவை அலுவல் நாட்கள் மே 13-ம் தேதி வரை உள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச் சரவைக் குழு நேற்று கூடியது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மக்களவையின் அலு வலை மேலும் 3 நாட்கள் நீட்டித்து மே 13 வரை அவையை நடத்த முடிவு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT