மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு வழக்கொழிந்த 125 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 945 வழக்கொழிந்த சட்டங் கள் திரும்பப் பெறப்பட உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
2001ம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்ற நடவடிக்கை இப்போதுதான் மேற்கொள்ளப் படுகிறது. இதன் மூலம் திறன் மிக்க ஆட்சிக்கு முட்டைக்கட்டையாக இருந்த வழக்கொழிந்த சட்டங் கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன என்று கூறப் படுகிறது.
1950 முதல் 2001ம் ஆண்டு வரையில் நூற்றுக்கும் அதிக மான சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன.
இதற்கிடையில், வழக் கொழிந்துபோன 758 நிதி ஒதுக் கீட்டுச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதா சமீபத் தில் மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்ட அமைச் சகத்தின் செயலர் சஞ்சய் சிங் கூறும்போது, "தற்காலத்தில் தேவைப்படாத மேலும் 1,871 வழக்கொழிந்த சட்டங்களை அடை யாளம் கண்டுள்ளோம். அவற்றை திரும்பப் பெறவும் மசோதாக்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்" என்றார்.