இந்தியா

எஸ்ஐஆர் பணிகளை கவனிக்க 44 சமாஜ்வாதி நிர்வாகிகள்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தேர்​தல் ஆணை​யத்​தின் எஸ்​ஐஆர் பணி​கள் தமிழ்​நாடு, மேற்கு வங்​கம், உபி. உள்​ளிட்ட 12 மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் நடந்து வரு​கிறது.

வாக்​காளர்​கள் எஸ்​ஐஆர் படிவங்​களை சமர்ப்​பிக்க டிசம்​பர் 4-ம் தேதி கடைசி நாளாகும். இதற்கு சில நாட்​களே உள்ள நிலை​யில் உ.பி.​யின் முக்​கிய எதிர்க்​கட்​சி​யான சமாஜ்​வா​தி, மாவட்ட வாரி​யாக 44 நிர்​வாகி​களை நியமித்​துள்​ளது. இவர்​களுக்கு எஸ்​ஐஆர் நடவடிக்​கைகளை கண்​காணிக்​கும் பொறுப்பை கட்​சி​யின் தலை​வர் அகிலேஷ் வழங்​கி​யுள்​ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கோசி தொகுதி சமாஜ்​வாதி எம்​.பி. ராஜீவ் குமார் ராய் கூறுகை​யில், ‘‘எஸ்​ஐஆர் மூலம் ஓபிசி மற்​றும் தலித்​துகளின் வாக்​கு​களை குறைக்​கும் சதி உள்​ளது. மவு நகர்ப்​புற சட்டப்பேரவை தொகு​தி​யில் சுமார் 20,000 பெயர்​கள் நீக்​கப்​பட்​டிருப்​பதை காண முடிந்​தது” என்​றார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர்​களின் பெயர்​களை மீண்​டும் சேர்க்க சமாஜ்​வாதி முயற்​சிக்​கிறது. கடைசி நாளான டிசம்​பர் 4-ம் தேதிக்கு பிறகு, ஆட்​சேபனை கள் தாக்​கல் செய்து திருத்​தங்​கள் செய்​ய​முடி​யும்.

இதற்​கிடை​யில் உ.பி. சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு இன்​னும் 2 ஆண்​டு​கள் இருப்​ப​தால், எஸ்​ஐஆர் பணி​களை நீட்​டிக்க வேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யத்​திடம் அகிலேஷ் வலி​யுறுத்​தி உள்​ளார்​.

SCROLL FOR NEXT