இந்தியா

சன் டிவி நிறுவனங்களுக்கு உரிமம் கிடைப்பதில் சிக்கல்

பிடிஐ

கலாநிதி மாறன் தலைமையிலான சன் டிவி நிறுவனங்களுக்கு ஒளிபரப்பு உரிமம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2ஜி ஊழல் வழக்கிலும், ஏர்செல் - மேக்சிஸ் வழக்கிலும் சன் குழும நிர்வாகிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், அந்நிறுவனம் சார்பில் கோரப்பட்டுள்ள உரிமம் புதுப்பித்தலை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரத்தில், "சன் டிவி நிறுவனங்கள் ஒளிபரப்பு உரிமங்கள் தொடர்பாக மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சர் அருண் ஜேட்லி உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியிருக்கிறார்" எனக் கூறப்படுகிறது.

இதேபோல், சன் டிவி நிறுவனமும் அதன் முதலாளிகளும் 2ஜி ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஏர்செல் - மேக்சிஸ் வழக்கிலும் அவர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. சன் டிவி நிறுவனத்துக்காக 300-க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல். இணைப்புகள் பெற்றதாகவும் எனவே அவர்களுக்கு மீண்டும் ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க இயலாது என உள்துறை அமைச்சகம் கூறிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

45 வானொலி பண்பலைகள்:

சன் குழுமம் சார்பில் தமிழகத்தில் சூரியன் எஃப்.எம் என்ற பெயரிலும் மற்ற பகுதிகளில் ரெட் எஃப்.எம் என்ற பெயரிலும் 45 வானொலி பண்பலைகளை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT