நேபாளத்தில் நிலநடுக்கத்தின் தாக்கமாக பிஹாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் நேற்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 57 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் பிஹார் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் கடுமையாக உணரப்பட்டது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
பிஹார் மாநிலத்தில் தலைநகர் பாட்னா உட்பட பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பாட்னா, சிவன், தர்பங்கா ஆகிய மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 77 ஆக உள்ளது.