செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு பல ஆண்டுகளாக சிக்காமல் இருந்த சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவரை ஆந்திர போலீஸார் டெல்லியில் கைது செய்து நேற்று கடப்பா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த மாதம் 7-ம் தேதி செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 20 பேரை ஆந்திர போலீஸார் சுட்டுக்கொன் றனர். நாடு முழுவதும் அதிர் வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து செம்மரக் கடத்தலில் முக்கிய புள்ளிகள் பலரை ஆந்திர போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் மஸ்தான்வலி, அவரது மனைவியும் நடிகையு மான நீத்து அகர்வால், தமிழ் சினிமா நடிகர் சரவணன், சீனாவைச் சேர்ந்த செம்மர வியாபாரி யாங் பிங், சென்னையைச் சேர்ந்த சவுந்தரராஜன், ஹரியாணாவை சேர்ந்த பதானி என இதுவரை 40-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.
இதில் பதானி கொடுத்த தகவலின் அடிப்படையில் டெல்லி யில் பதுங்கியிருந்த பிரபல செம்மர கடத்தல் வியாபாரி மணிவண்ணன் என்கிற மணியை (54), கடப்பா போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவரை நேற்று கடப்பா மாவட்டம் ரயில்வே கோடூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மணிவண்ணனிடம் நடத்திய விசாரணையில் இவர் திருப்பதி, கடப்பா, கர்னூல் ஆகிய மாவட் டங்களில் செம்மரங்களை வெட்டி, துபாய், சீனா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு கடத்திவந்ததாக தெரியவந்துள் ளது. மேலும் இவர் தற்போது தலைமறைவாக உள்ள பிரபல செம்மரக் கடத்தல்காரர் கங்கி ரெட்டியின் கூட்டாளி எனவும் தெரியவந்தது.
இவருடன் தொடர்புடையவர் கள் பற்றி விசாரணை நடத்தி, அவர்களையும் போலீஸார் கைது செய்வார்கள் என கடப்பா மாவட்ட எஸ்.பி. நவீன் குலாடி நேற்று செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.