இந்தியா

மீரா குமார் தோற்ற செய்தியைக் காண்பித்ததற்காக லோக்சபா டிவி தலைமை அதிகாரி நீக்கம்

செய்திப்பிரிவு

சபாநாயகர் மீரா குமார், லோக்சபா தொலைக்காட்சித் தலைமைச் செயல் அதிகாரி ராஜிவ் மிஸ்ராவை எந்த வித காரணமும் கூறாமல் நீக்கியுள்ளார்.

மே 30ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்றில் லோக்சபா தொலைக்காட்சி தலைமை அதிகாரி ராஜிவ் மிஸ்ராவின் பதவிக்காலம் மே 31ஆம் தேதியோடு முடிவடைகிறது என்று மீரா குமார் குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பீகார் மாநிலத்தின் சசாராம் தொகுதியில் சபாநாயகர் மீரா குமார் தோற்ற செய்தியைக் காண்பித்ததற்காக தான் நீக்கப்பட்டதாக ராஜிவ் மிஸ்ரா செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்துள்ளார்.

"சசாராம் தொகுதியில் தோற்ற செய்தியை காண்பித்த பிறகே மேடம் என் மீது கடும் கோபத்தில் இருந்ததாக உடன் பணியாற்றியவர்கள் என்னிடம் தெரிவித்தனர்” என்று ராஜிவ் மிஸ்ரா கூறியுள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியன்று ராஜிவ் மிஸ்ராவின் ஒப்பந்தம் அடுத்த உத்தரவுகள் வரும் வரை நீட்டிக்கப்பட்டது. மேலும் அவரது தலைமையின் கீழ் லோக்சபா தொலைக்காட்சி லாபத்துடன் இயங்கியதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT