காஷ்மீர் பண்டிட்கள் படுகொலை சம்பவம் தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரிக்கக் கோரி டெல்லியில் நேற்று அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து அங்கு காஷ்மீர் பண்டிட்களை மீண்டும் குடியேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஷ்மீர் பண்டிட்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது அவர்கள் ஹூரியத் மாநாட்டு தலைவர்கள், பிரிவினைவாதத் தலைவர்களுக்கு எதிராக கோஷமிட்டனர்.
காஷ்மீர் பண்டிட்கள் மாநிலத் தைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட போது ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கு களை மாநில அரசு மீண்டும் விசாரிக்க வேண்டும்.
மீள்குடியேற்றம் தொடர் பாக தங்கள் சமுதாய பிரதிநிதி களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்துள்ளனர்.