இந்தியா

ஏழுமலையானின் ரூ. 2.5 லட்சம் கோடி சொத்துகள் சீமாந்திராவுக்கே சொந்தம்: ஆந்திர அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலம் ஜூன் 2-ம் தேதி தெலங்கானா, சீமாந்திரா என இரண்டு மாநிலங்களாகப் பிரிகிறது. இதில் உலகப்பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலை யானின் ரு. 2.50 லட்சம் கோடி அசையா சொத்துகள் மற்றும் 11 டன் தங்க நகைகள் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சினை வரக்கூடாது என்பதால், இவை அனைத்தும் திருப்பதி தேவஸ் தானத்திற்கும் இது அமைந்துள்ள சீமாந்திராவிற்கே சொந்தம் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிய உள்ள நிலையில், தற்போது அனைத்து துறைகளிலும் பாகப் பிரிவினை நடைபெற்று வரு கிறது. தெலங்கானா, சீமாந்திரா பகுதிகளில் உள்ள அரசு, இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட் டவை பிரிக்கப்பட்டு வருகின்றன.

இதில், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்துகள் அனைத்தும் தேவஸ்தானத் திற்கே சொந்தமானது என்றும், பக்தர்கள் காணிக்கையாக அளித்ததால் இவைகள் மாநில பிரிவினை பிரச்சினைக்கு சம்பந்த மில்லை என ஆந்திர அரசு ஒரு அரசாணையை வெளியிட்டு இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மன்னர் காலம்தொட்டே திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் நிலம், வீடுகள், போன்ற அசையா சொத்துகளை காணிக் கையாக வழங்கி வருகின்றனர். இவைகள் நாடு முழுவதும் உள் ளன. மொத்தம் 4,300 ஏக்கர் நிலம் ஏழுமலையானுக்கு சொந்தமாக உள்ளதாக கடந்த 2009 கணக்கின் படி தெரிய வந்துள்ளது.

இந்நிலத்தின் அரசு மதிப்பு ரூ. 33 ஆயிரம் கோடி. இதுவே சந்தை நிலவரப்படி சுமார் 2.50 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, ஏழுமலையா னுக்கு 11 டன் நகைகள், மற்றும் விலைமதிக்க முடியாத வைரம், வைடூரியம், கோமேதகம் போன்ற கற்கள் உள்ளன. தற்போது இவை அனைத்தும் தேவஸ்தானத்திற் கும், இது அமைந்துள்ள சீமாந்திராவிற்கே சொந்தம்.

SCROLL FOR NEXT