இந்தியா

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் மனித உரிமை ஆணைய குழு ஆய்வு

செய்திப்பிரிவு

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் சச்சிநோடு பண்டா, சீக்கடிகல கோனா ஆகிய இரு இடங்களில் கடந்த மாதம் 7-ம் தேதி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 20 பேரை ஆந்திர அதிரடிப் படை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இவர்கள் அனைவரும் திருவண்ணா மலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

இந்த சம்பவம் குறித்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் என் கவுன்ட்டர் வழக்கை கொலை வழக் காக பதிவு செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், அடை யாளம் தெரியாத 24 போலீஸார் மீது சந்திரகிரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, என்கவுன்ட்டரில் இறந்த 6 பேரின் உடல்களுக்கு திருவண்ணாமலையில் மறு பிரேதப் பரிசோதனையும் செய்யப் பட்டது. இதன் அறிக்கையையும் மருத்துவக் குழுவினர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்தனர்.

தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி கே.ஜி. பால கிருஷ்ணன் தலைமையிலான குழு, ஹைதராபாத்தில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியது. அப்போது சம்பவ இடத்தை விரைவில் ஆய்வு செய்வோம் என இக்குழு தெரிவித்தது.

இந்நிலையில், தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் தத்தூ தலமையில் 5 பேர் கொண்ட குழுவினர் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் என்கவுன்டர் நடைபெற்ற இடங்களை நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தத்தூ கூறும்போது, “ நீதிமன்றத் தில் வழக்கு விசாரணை நடை பெற்று வருவதால், இது குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. இன்னும் 4 நாட்கள் திருப்பதியில் தங்கி, போலீஸ், அதிரடிப்படை, வருவாய், வனத்துறை என பல்வேறு துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளோம். அதன்பின், இதுகுறித்த ஆய்வறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையத் திடம் வழங்குவோம்” என்றார்.

SCROLL FOR NEXT