இந்தியா

ஆசிய கனவுகளுக்கு இந்திய வளர்ச்சி வடிவம் தரும்: மோடி

பிடிஐ

இந்தியாவின் வளர்ச்சி, ஆசிய நாடுகளின் கனவுகளுக்கு வடிவம் தரும். ஆசிய நாடுகளுக்கு இடையே ஒற்றுமை ஓங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தென் கொரியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று தலைநகர் சியோலில் ஆறாவது ஆசியத் தலைவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, "ஆசிய நாடுகளுக்கு இடையே ஒற்றுமை ஓங்க வேண்டும். ஆசியர்களாக நாம் ஒன்றிணைந்து உலகை உருமாற்றுவோம்.

நாம் ஒன்றுபட்டால் ஐ.நா. போன்ற சர்வதேச அங்கத்தைக்கூட சீர்திருத்தலாம். ஆசியா ஒன்றுபட வேண்டுமானால், பல்வேறு பிராந்தியங்களாக பிரிந்து கிடப்பதை தவிர்க்க வேண்டும். ஆசிய நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவினால், அது ஆசிய கண்டத்துக்கு ஏற்படும் பெரும் பின்னடைவு.

மாறாக நாம் ஒற்றுமையாக இருந்தால் உலகுக்கே ஒரு புது வடிவம் கிடைக்கும். ஒரு நாட்டின் வெற்றி மற்றொரு நாட்டுக்கு வலு சேர்க்கும். இந்தியாவின் வளர்ச்சி ஆசிய நாடுகளின் கனவை நனவாக்கும்.

ஆசிய நாடுகளில் சில பெரு வளர்ச்சி கண்டுள்ளன. சில நாடுகள் மிகவும் பின் தங்கியிருக்கின்றன. அவ்வாறாக வளர்ந்த நாடுகள் மற்ற நாடுகளுடன் தங்கள் வளங்களையும், சந்தைகளையும் பகிர்ந்து கொண்டு பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டும்" என்றார் மோடி.

SCROLL FOR NEXT