ராஜஸ்தான் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட புழுதிப் புயலில் 9 பேர் பலியாயினர். அவர்கள் அனைவருக்கும் ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 3 மணி அளவில் புழுதிப் புயல் உருவானது. இது சுமார் ஒரு மணி நேரம் நீண்டது. பிகானெர் பகுதியில் உருவான இந்தப் புயல் ஜோத்பூர், நாகார், ஜெய்பூர், ஆல்வார், பரத்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நகர்ந்தது.
இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. போக்குவரத்து மற்றும் மின்சார விநியோகம் ஆகியவையும் பாதிக்கப்பட்டன.
பரத்பூரில் ஏற்பட்ட புழுதிப் புயலில் ஐந்து பேர் இறந்தனர். தோல்பூரில் இருவரும், பிகானெ ரில் இருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார்.