3 நாடுகள் சுற்றுப் பயணத்தின் நிறைவாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள் கிழமை) காலை தென் கொரியா சென்றடைந்தார்.
அவரது இந்தப் பயணம் தென் கொரியாவுடனான பொருளாதார, வர்த்தக உடன்பாட்டை மேம்படுத்த உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி, தென் கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார்.
அப்போது, இரட்டை வரிவிதிப்பு முறையை தவிர்க்கும் ஒப்பந்தம், கப்பல் போக்குவரத்து, சரக்கு, கையாள்தல், எரிசக்திதுறை என பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கொரியாவில், 1,500 இந்தியர்கள் உட்பட பலர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.