இந்தியா

ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

செய்திப்பிரிவு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று (புதன் கிழமை) இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மகாத்மா காந்தி படுகொலை சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீது குற்றம் சாட்டியது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி மீது மகாராஷ்டிரம் மாநிலத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

தானே மாவட்டம் பிவாண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில், வழக்கு விசாரணை தடை கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பி.சி.பண்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ராகுல் காந்திக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT