உலகை உலுக்கிய நேபாள பூகம்ப துயரத்தையடுத்து சிக்கிம் மாநில அரசு, கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்து முடிவெடுத்துள்ளது.
இது குறித்து சிக்கிம் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிக்கிம் மக்கள் கடவுள்கள் மீது தீவிர நம்பிக்கையும் பக்தியும் கொண்டவர்கள். நேபாளத்தை பீடித்த துயரத்தையடுத்து, மாநில அரசு கடவுள்களை சாந்தப்படுத்த சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சமயக்குருமார்கள் தேவையான சடங்குகளையும் பூஜைகளையும் செய்து இயற்கை பேரிடர்களைத் தடுத்து மக்களைக் காக்குமாறு அரசு வேண்டுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.