உத்தர பிரதேசத்தில் சிறுமிகள் 2 பேர் சில தினங்களுக்கு முன்னர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, பின் தூக்கில் தொங்க விடப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் சர்வேஷ் யாதவ் மற்றும் சத்திரபால் யாதவ் ஆகியோர் சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரை அலட்ச்சியப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இவர்கள் இருவரையும் உ.பி. அரசு பணி நீக்கம் செய்துள்ளது. இந்த நிலையில் மேலும் 3 பேரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பதௌன் பகுதியில் 14, 15 வயதையுடைய சிறுமிகள் இருவர் பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிபட்டு கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 5-வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் பெயர் தெரியாத 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
2 போலீஸ் உட்பட 7 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 போலீசாரும், பப்பு யாதவ், அவதேஷ் யாதவ் மற்றும் உர்வேஷ் யாதவ் ஆகிய 3 சகோதரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் உத்தர பிரதேச மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக விரைவு நீதிமன்றம் மூலம் உடனடியாக குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர மாநில அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.