இந்தியா

தேர்தலில் நடுநிலைமை: பிரணாப் முகர்ஜி வாக்களிக்க மாட்டார்

செய்திப்பிரிவு

வரும் மக்களவைத் தேர்தலில் தனது நடுநிலைத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் வாக்களிப்பதை தவிர்க்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முடிவு செய்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் தெற்கு கொல்கத்தா மக்களவைத் தொகுதியில் கடைசி கட்டமாக மே 12-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்தத் தொகுதியின் வாக்காளரான குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அன்றைய தினம் கொல்கத்தா சென்று வாக்களிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் வேணு ராஜ்மோனி டெல்லியில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியபோது, தனது நடுநிலைத்தன்மையை வெளிப் படுத்தும் வகையில் மக்களவைத் தேர்தலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாக்களிக்க மாட்டார் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT