கொலை இரண்டு வகையாக பிரிக்கப் பட்டுள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கருணைக் கொலை குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டு துன்புறு வோரையும் இனி பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கருதப்படும் நோயாளிகளையும் அவர்களது உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நோயாளிகளை துன்பம் இல்லாமல் கொல்வது கருணைக் கொலை எனப்படுகிறது. கருணைக் கொலை செய்வதை அதற்காக, நடவடிக்கை எடுப்பது, நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என்று இருவகையாக பிரித்துள்ளனர்.
நடவடிக்கை எடுப்பது: மருத்துவர்களோ அல்லது வேறு நபர்களோ (மருத்துவ உதவியாளர்கள்) நோயாளி மரணமடைவதற்காக திட்டமிட்டு (விஷ ஊசி போடுவது) செய்வது.
நடவடிக்கை எடுக்காமல் இருப்பது: நோயாளி உயிர் வாழ்வதற்காக செய்ய வேண்டியவற்றை செய்யாமல் இருப்பது அல்லது செய்து கொண் டிருப்பதை நிறுத்துவது. செயற்கை சுவாசத்தை நிறுத்துவது.
இந்தியாவில் கருணைக் கொலை தொடர்பான பிரபல வழக்குகள்:
1994:
பி.ரத்தினம் எதிர் மத்திய அரசு வழக்கில், ஒரு மனிதனுக்கு இறக்க உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1996:
1994-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவின் கீழ் வாழ்வதற்கான உரிமை என்பது சாவதற்கான உரிமை அல்ல என்று கூறிய உச்ச நீதிமன்றம் கருணைக் கொலையை சட்ட விரோதம் என்று அறிவித்தது.
1999:
கருணைக் கொலையை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற மூத்த குடிமக்கள் 4 பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
2000:
வாழ்க்கையில் விரக்தி அடைந்ததாலோ அல்லது வாழ்வின் குறிக்கோளை அடைந்து விட்டதாலோ ஒருவர் தனது வாழ்க்கையை முடித்து வலுக்கட்டாயமாக உயிரை போக்கிக் கொள்வது தற்கொலை என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியது.
2004:
தசை சிதைவு நோயால் 15 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட 25 வயதான கே.வெங்கடேஷ் என்பவரின் தாய், தனது மகனை கருணை கொலை செய்ய ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
2005:
கோமா நிலையில் இருந்த பெண்ணைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பெண்ணின் கணவரும் மகனும் பாட்னா உயர் நீதிமன்றத்தை அணுகினர்.
2007:
நிரந்தரமான கோமா நிலையை அடைந்தவர் களுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும், அதாவது செயற்கை சுவாசத்தை அகற்றுவதன் மூலம் செய்யப்படும் கருணைக் கொலையை சட்டபூர்வமாக அறிவித்தது.
மற்ற நாடுகளில்:
நெதர்லாந்து:
ஏப்ரல் 2002-ல் உலகின் முதல் நாடாக நெதர்லாந்து கருணைக் கொலையை சட்ட பூர்வமாக்கியது.
பெல்ஜியம்:
கருணைக் கொலை 2002-ம் ஆண்டில் சட்டபூர்வமானது.
அமெரிக்கா:
மருத்துவர்களின் உதவியால் கருணைக்கொலை செய்யப்படுவது சட்ட பூர்வமானது.
இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் கருணைக் கொலை சட்ட விரோதம்.