இந்தியா

குஜ்ஜார் பிரதிநிதிகளுடன் ராஜஸ்தான் அரசு மீண்டும் பேச்சுவார்த்தை

பிடிஐ

அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு கோரி ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குஜ்ஜார் இன பிரதிநிதிகளுடன் அம்மாநில அரசு மீண்டும் பேச்சுவாத்தையை தொடங்கியுள்ளது.

முன்னதாக, நேற்றிரவு இருதரப்பினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், இன்று காலை மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அரசு தரப்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், சமூக நீதித்துறை, உணவுத் துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர்.

குஜ்ஜார்கள் போராட்டத்தால், ரயில்கள் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதால் மேற்கு ரயில்வேக்கு தினமும் ரூ. 15 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குற்ப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT