‘‘ராணுவத்தில் போர் முனையில் பணிபுரிவதற்கு பெண்களை நியமிக்க முடியாது’’ என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ராணுவத்தில் எதிரிகளுடன் மோதும் போர் முனைகளில் தங்களை நியமிக்க வேண்டும் என்று பெண்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில் புனே அருகில் உள்ள படக்வஸ்லா பகுதியில், தேசிய பாதுகாப்பு அகடமியில் பயிற்சி முடித்தவர்களின் அணி வகுப்பு நேற்று நடந்தது. இந் நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்றார். சிறப்பாக பயிற்சி முடித்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பாரிக்கர் கூறியதாவது:
ராணுவத்தில் போர் முனை களில் பணி செய்வதற்கு பெண் களை நியமிக்க முடியாது. ஆனால், ராணுவத்தின் வேறு பல பிரிவுகளில் பெண்கள் நியமிக் கப்படுவார்கள். அதற்காக அவர் களை ஊக்கப்படுத்துவோம். போரின்போது எதிரி நாட்டு படை களிடம் பெண்கள் சிக்கினால் என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். போர் கைதிகளாக பெண்கள் சிக்கி னால், கடும் சித்ரவதைக்கு அவர்கள் ஆளாவார்கள். அதன் காரணமாகத்தான் போர் முனைகளில் பெண்களை நியமிக்க இயலாது. இவ்வாறு பாரிக்கர் கூறினார்.