இந்தியா

செய்தி சேனல்களிடையே போட்டி சூடு பிடிக்கிறது விளம்பர யுத்தம்: டைம்ஸ் நவ் - என்டிடிவி மோதல்

செய்திப்பிரிவு

இந்திய சின்னத்திரை சந்தை யில் ஆங்கில செய்தி சேனல்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக முன்னணி சேனல்கள் என்.டி.டி.வி.யும், டைம்ஸ் நவ்வும் பரஸ்பரம் விமர்சன கணைகளை வீசி வருகின்றன.

டைம்ஸ் நவ் அண்மையில் வெளி யிட்ட விளம்பரத்தில் அதன் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, டி.வி. ரேட்டிங்கில் தங்களது சேனல் முன்னிலையில் இருப்பதாக கூறினார்.

அதற்குப் போட்டியாக என்.டி.டி.வி. புதிய விளம்பரத்தை வெளி யிட்டுள்ளது. அதில் டைம்ஸ் நவ் சேனலின் பெயரைக் குறிப்பிடாமல் அந்த சேனல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக டைம்ஸ் நவ் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, ஆவேசமாக உரத்த குரலில் பேசு வார். அவரின் செய்கை விளம்பரத் தில் மறைமுகமாக கிண்டல் செய்யப்பட்டுள்ளது.

சாதாரண செய்திகளைக்கூட பரபரப்பு செய்தியாக்குவது, வதந்தி களை ஊதி பெரிதாக்குவது, குற்றச் சாட்டுகளை அள்ளித் தெளிப்பது என இந்திய செய்தி சேனல்கள் தங் களின் தரத்தை தாங்களே தாழ்த்தி வருகின்றன என்று என்.டி.டி.வி. வருத்தம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு இதேபாணியில் பல்வேறு விளம்பரங்களை அந்த சேனல் வெளியிட்டிருக்கிறது. ஆனால் இந்த முறை டைம்ஸ் நவ்வை குறிவைத்து சற்று காட்டமாகவே விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த விளம்பர வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் விரும்பப்படும் வீடியோவாக வலம் வருகிறது.

SCROLL FOR NEXT