இந்தியா

வெய்போவில் மோடி-லீ செல்பிக்கு 31.85 மில்லியன் ஹிட்கள்

பிடிஐ

பிரதமர் மோடி சீன பிரதமர் லீ கெக்கியாங்குடன் எடுத்துக் கொண்ட செல்பிக்கு சீன சமூக வலைத்தளமான வெய்போவில் 31.85 மில்லியன் ஹிட்கள் கிடைத்துள்ளது.

மேற்கத்திய ஊடகங்கள் இந்த செல்பியை "power-packed selfie" என்று வர்ணித்துள்ளது.

மோடியின் வெய்போ கணக்கில் அவரை சுமார் 1.65 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

அதேபோல் ட்விட்டரில் மோடியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 12.3 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT