இந்தியா

2ஜி வழக்கில் சாட்சியாக சேர்க்க ஆ.ராசா புதிய மனு

எம்.சண்முகம்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு டெல்லி பாட்டி யாலா ஹவுசில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா நீதிபதி ஓ.பி.சைனி முன் ஆஜராகி தன் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள் ளார். இந்நிலையில், தன்னை வழக்கில் ஒரு சாட்சியாகவும் சேர்க்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு குறித்து சிபிஐ தரப்பில் பதிலளிக்க கோரப்பட்டுள்ளது. சாட்சியாக சேர்ப்பது குறித்து நீதிபதி முடிவு செய்யவுள்ளார்.

2ஜி ஊழலில் ரூ.200 கோடி கலைஞர் டிவி-க்கு பரிமாற்றம் நடந்தது குறித்து அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த வழக்கு புதனன்று விசாரணைக்கு வந்தபோது, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனை வரும் நேரில் ஆஜராகினர். குற்றப்பத்திரிகை குறித்து படித்துப் பார்த்து பதிலளிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் தரப்பில் கோரப்பட்டது.

இதையடுத்து வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT