மான் வேட்டையாடியது தொடர் பான வழக்கில், 5 அரசுத்தரப்பு சாட்சிகளிடம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி நடிகர் சல்மான் தொடர்ந்த மறு ஆய்வு மனுவை ஜோத்பூர் செஷன்ஸ் நீதி மன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பான மனுவை செஷன்ஸ் நீதிபதி மனோஜ் வியாஸ் விசாரித்தார். கடந்த வாரம் விசாரணை முடிந்ததையடுத்து, தீர்ப்பை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தார். இந்நிலையில், இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நேற்று அறிவித்தார்.
சல்மான் கான் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள 5 சாட்சிகளிடமும் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த வலியுறுத்தி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத் பூரில் கடந்த 1998-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி மான் வேட்டையாடியதாக சல்மான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது காலாவதியான துப்பாக்கி உரிமம் வைத்திருந்ததாக ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதுகுறித்து சல்மான் வழக் கறிஞர்சரஸ்வத் கூறும்போது, “நீதி மன்ற உத்தரவை ஆராய்ந்த பிறகு, உயர் நீதிமன்றத்தை அணுகு வது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.