செம்மர கடத்தல் வழக்குகளில் இதுவரை 4,500 பேரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர் என டிஜிபி ராமுடு தெரிவித்தார்.
ஆந்திர மாநில போலீஸ் டிஜிபி ராமுடு நேற்று காக்கிநாடாவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: செம்மர கடத்தலை தடுக்க தொடர்ந்து முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வெளிமாநிலங்களைச் சேர்ந்த பல கடத்தல்காரர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது வரை 4,500 பேரை செம்மர கடத்தல் தொடர்பாக கைது செய்துள் ளோம். ஆயினும் செம்மரக் கடத்தல் காரர்களிடம் மாற்றம் ஏதும் வர வில்லை. தொடர்ந்து குற்றமிழைத்து வருகின்றனர். இவ்வாறு டிஜிபி ராமுடு தெரிவித்தார்.