இந்தியா

2ஜி ஊழல் வழக்கில் பிரதமரை விசாரிக்க பாஜக வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் கூறுகையில், "முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக, பிரதமரிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ளாமல், இந்த வழக்கில் விடை கிடைக்காது. பிரதமரில் ஆலோசனைப்படியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆ.ராசவின் வாக்குமூலம் இதனை நிரூபித்துள்ளது" என்றார்.

முன்னதாக, 2ஜி விவகாரத்தில் அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடன்பாட்டுடனே நடைபெற்றது என்றும், எந்த முடிவும் ஒருதலைப்பட்சமாக நடைபெறவில்லை என்றும் ஆ.ராசா நேற்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT