இந்தியா

உத்தராகண்ட் மாநிலத்துக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்க அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை

கவிதா உபாத்யாய்

நேபாளப்பகுதியில் பூமியின் அடிப்பரப்பு நிலவியல் தன்மைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக உத்தராகண்ட் மாநிலம் பயங்கர பூகம்பம் ஒன்றை எதிர்காலத்தில் சந்திக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றில், மத்திய இமாலய நிலநடுக்க மையத்தில் உள்ள ஃபால்ட்டின் மேல் மற்றும் கீழுள்ள இரு பெரும்பாறைகள் பல்வேறு ஆற்றல் மோதல்களின் காரணமாக வடிவம் சிதைந்து காணப்படுகிறது என்று நில வடிவயியல் வெளிப்படுத்துவதாக, கூறப்பட்டுள்ளது.

700 கிமீ நீள ‘நிலநடுக்க இடைவெளி’ இமாலயத்தில் உள்ளது, கடந்த 200-500 ஆண்டுகளாக இது நிலநடுக்கத்தினால் பிளவுறவில்லை. இதனால் இங்கு கடுமையான ஆற்றல் அழுத்தம் சேர்ந்து கிடக்க வாய்ப்புள்ளது. இந்த இடைவெளியின் மேற்கத்திய பாதியில் உத்தராகண்ட் மாநிலம் உள்ளது.

சி.எஸ்.ஐ.ஆர். விஞ்ஞான ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த வினோத் குமார் கவுர், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு கூறும் போது, “உத்தராகண்ட் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது, இது நாளைக்கே கூட ஏற்படலாம் அல்லது 50 ஆண்டுகள் கழித்தும் ஏற்படலாம். ஆனால் நிச்சயம் ஏற்படும் அபாயம் உள்ளது.

எங்களது கணக்கீடுகளின் படி தற்போதைய டெக்டானிக் தட்டுகளின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும் போது நேபாளத்தின் இமாலய மேற்குப் பகுதியில், உத்தராகண்ட் உட்பட நிறைய ஆற்றல் வெளிப்படாமல் அடைந்து, சேமித்து கிடக்கிறது. இந்த ஆற்றல்கள் வெளிப்பாடு காணும்போது மிகப்பெரிய நிலநடுக்கங்கள் இப்பகுதிகளில் ஏற்படும் அபாயம் உள்ளது என்றார்.

2013-ம் ஆண்டு ஏற்பட்ட, ‘இமாலய சுனாமி’ என்று அழைக்கப்பட்ட உத்தராகண்ட் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT