இந்தியா

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.13, டீசல் விலை ரூ.2.71 அதிகரிப்பு

பிடிஐ

பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.13, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.71 அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இதன் படி பெருநகரங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரங்கள்:

சென்னை:

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.08-லிருந்து ரூ.3.37 அதிகரித்து ரூ.69.45க்கு விற்கப்படும்.

டீசல் விலை லிட்டருக்கு ரூ.52.76 -லிருந்து ரூ.2.98 அதிகரித்து ரூ.55.74-க்கு விற்கப்படும்.

புதுடெல்லி:

பெட்ரோல் விலை ரூ.63.16-லிருந்து ரூ.3.13 அதிகரித்து ரூ.66.29 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

டீசல் விலை ரூ.49.71-லிருந்து ரூ.2.71 அதிகரித்து ரூ.52.28 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

கொல்கத்தா:

பெட்ரோல் விலை ரூ.70.44-லிருந்து ரூ.3.32 அதிகரித்து ரூ.73.76 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

டீசல் விலை ரூ.54.17-லிருந்து ரூ.2.68 அதிகரித்து ரூ.56.85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மும்பை:

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.84-லிருந்து ரூ.3.28 அதிகரித்து ரூ.74.123 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.87-லிருந்து ரூ.2.99 அதிகரித்து ரூ.59.86 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT