இந்தியா

மம்தா கட்சிக்கும் பாஜகவுக்கும் நெருக்கம் என்பது நல்ல அரசியல் மசாலா: மேற்குவங்க பாஜக பொறுப்பாளர் கருத்து

பிடிஐ

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிண மூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக வுக்கும் இடையே நெருக்கம் ஏற் பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல்கள் நல்ல அரசியல் மசாலா என்று பாஜக தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வங்கதேசத் துடனான நில எல்லை வரையறை ஒப்பந்த மசோதா மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாக்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளை திரிணமூல் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், இவ்விரு கட்சி களும் நெருக்கமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், பிரதமரின் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு திட்டம் உள்ளிட்ட 3 சமூகப் பாதுகாப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை கொல்கத்தாவில் தொடங்கி வைக் கிறார். நாட்டின் பிற மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் அறிமுகம் செய்து வைக்கின்றனர்.

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளரும் மேற்குவங்க பொறுப்பாளருமான சித்தார்த்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாஜகவும் திரிணமூல் காங் கிரஸ் கட்சியும் நெருக்கத்துடன் இருப்பதாக சில ஊடகங்களும் எதிர்க்கட்சியினரும் குறை கூறி வரு கின்றனர். பின்தங்கிய கோடிக் கணக்கானவர்களின் நலனுக்காக மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணக்கமாக செயல்படுகிறது. இந்தக் கண்ணோட்டத்தை மறந்து இரு கட்சிகளும் நெருக்கத்துடன் இருப்பதாக கூறுவது அரசியல் மசாலா.

அரசியல் ரீதியாக திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக தொடர்ந்து போராடும். ஆனால், அரசியலுக்காக மக்கள் நலனை பலிகடா ஆக்க மாட்டோம்.

ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 12 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள் ளன. இதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில் பிறந்து திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் வளர்ந்த சீட்டு நிறுவனங்களை மக்கள் நம்பியிருக்க வேண்டிய நிலை மாறி உள்ளது.

சமூக பாதுகாப்பு திட்டங்களை பிரதமர் மோடி கொல்கத்தாவில் தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு மாநிலத்தில் உருக்கு ஆலை ஒன்றை திறந்து வைக்க உள்ளார். மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத் தில் நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை உணர்த்துவதாக இது அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT