இந்தியா

விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவையே தோல்விக்குக் காரணம் - மன்மோகன் சிங்

செய்திப்பிரிவு

"எனது ஆட்சியின் போதாமைகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்" என்று கடந்த ஆட்சியின் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மக்களைவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி படுதோல்வியடைந்ததற்கு விலைவாசி உயர்வும், ஊழலும் காரணம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் மன்மோகன் சிங் இவ்வாறு கூறியதாக காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்தன் திவேதி தெரிவித்துள்ளார்.

மன்மோகன் கூறியதாவது:

"என்னுடைய ஆட்சியின் போதாமைகளுக்கு நான் முழுப்பொறுப்பேற்கிறேன். விலைவாசி உயர்வு, மற்றும் ஊழல் குறித்து மக்களிடம் நாம் சரியான முறையில் உரையாடவில்லை. இதனால்தான் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது.

சோனியா மற்றும் ராகுல் காந்தி இருவரும் செய்த பங்களிப்புகள், முயற்சிகள் மற்றும் அளித்த ஆதரவு அசாதாரணமானது"

இவ்வாறு கூறியுள்ளார் மன்மோகன் சிங்

SCROLL FOR NEXT