இந்தியா

பாஜக அடுத்த தலைவர் யார்?- ஆர்எஸ்எஸ் தலைவருடன் ராஜ்நாத் ஆலோசனை

செய்திப்பிரிவு

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக அடுத்த தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசித்தார்.

தற்போதைய பாஜகவின் தேசியத் தலைவரான ராஜ்நாத் சிங், மோகன் பகவத் மட்டும் அல்லாமல், ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் பலரையும் சந்தித்தார்.

கட்சியின் பொதுச் செயலாளர்கள் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, அருண் மாதுர் பெயர்கள் பாஜக தலைவர் பதவிக்கு அடிபட்டு வந்தாலும், ஜெ.பி.நட்டாவுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ராஜ்நாத் சிங் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடனான சந்திப்பு குறித்து விவரித்தார்.

பாஜக நிர்வாகிகள் பலர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால் நிர்வாக மட்டத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT