இந்தியா

டெல்லி வனவிலங்குகள் சரணாலயத்தில் 14 அடி நீள ராஜ நாகத்தை காண குவியும் மக்கள்

ஸ்வேதா கோஸ்வாமி

டெல்லி வனவிலங்குகள் சரணால யத்துக்கு புதிய வரவாக 14 அடி நீள ராஜ நாகம் வந்துள்ளது. இந்த ராஜ நாகத்தை காண சரணால யத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

ராஜஸ்தானின் கோடா மாவட்டத் தில் ராஜ நாகத்தை விற்க முயன்ற கிராமவாசியை மாநில வனத் துறையினர் அண்மையில் பிடித் தனர். அவரிடமிருந்து ராஜநாகம் பறிமுதல் செய்யப்பட்டது. நீதி மன்ற உத்தரவின்படி அந்த ராஜ நாகம் டெல்லி வனவிலங்குகள் சரணாலயத்தில் ஒப்படைக்கப் பட்டது. உலகின் மிகக் கொடிய நச்சுப் பாம்பான ராஜநாகம் 22 அடி வரை வளரக்கூடியது. டெல்லி சரணாலயத்தில் உள்ள ராஜநாகம் 14 அடி நீளம் உள்ளது. இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளை உணவாக உட்கொள்கின்றன. சர ணாலய பாம்பு மிக நீண்டகாலமாக ராஜஸ்தான் கிராமவாசி வசம் இருந்துள்ளது. பெட்டிக்குள் அடைக் கப்பட்டிருந்த அந்த பாம்புக்கு கிராமவாசி கோழிக்கறியை உண வாகக் கொடுத்துள்ளார். எனவே சரணாலயத்திலும் ராஜபாம்புக்கு தினமும் அரை கிலோ கோழிக்கறி கொடுக்கப்படுகிறது.

கடந்த 16-ம் தேதி முதல் ராஜநாகத்தை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சரணாலயத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

SCROLL FOR NEXT