இந்தியா

சீனா - இந்தியா கலாச்சாரத்தை மையமிட்டு ஜாக்கிசான், ஆமிர் கான் நடிப்பில் குங்பூ யோகா திரைப்படம்

பிடிஐ

‘சீனா - இந்தியா கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ‘குங்பூ யோகா’ உட்பட 3 திரைப்படங்களை இரு நாடுகளும் இணைந்து தயாரிக்கும்’’ என்று சீன திரைப்பட கட்டுப்பாட்டு துறை அறிவித்துள்ளது.

நடிகர் ஜாக்கிசான், பாலிவுட் நடிகர் ஆமிர் கான் நடிப்பில் ‘குங்பூ யோகா’ திரைப்படம் உட்பட திரைப்படங்கள் இரு நாட்டு தயாரிப்பாக வெளியிடப்படும் என்று சீன திரைப்பட கட்டுப்பாட்டுத் துறை கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. இதன் மூலம் வெளிநாட்டு படங்கள் பிரிவின் கீழ் இந்திய திரைப்படங்கள் சீனாவுக்குள் நுழைய முடியும். அதேபோல் இந்தியப் படங்களால் சீனாவுக்கும் பலன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சீன தற்காப்பு கலையான குங்பூ, இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் யோகா ஆகிய இரண்டையும் இணைத்து ‘குங்பூ யோகா’ என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கப்படுகிறது. இதில் நடிகர் ஜாக்கிசான், பாலிவுட் நடிகர் ஆமிர்கான் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

* சீனாவின் டாங் மன்னராட் சியின் போது (கி.பி.618-907), புத்த துறவி ஸுவான் ஸாங் என்பவர் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இவரது பயணத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளது.

* ‘டா நவோ டியான் ஸு’ (இந்தியாவில் குழப்பம் செய்வது) பெயரில் மற்றொரு திரைப்படம் எடுக்கப்பட உள்ளது. இந்தப் படத்தை பிரபல சீன நடிகர் வாங் பவோகியாங் என்பவர் இயக்கும் முதல் திரைப்படமாக இருக்கும்.

SCROLL FOR NEXT