கடந்த வாரம் நிலநடுக்கம் ஏற்பட்ட பிஹார் பகுதிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட உள்ளார்.
ஏப்ரல் 25-ம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் வட இந்தியாவில் எதிரொலித்தது. பிஹாரில் அதிக பாதிப்புகள் இருந்தது.
இந்த நிலையில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் இன்று நேரில் சந்திக்க உள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளை அவர் பார்வையிட உள்ளதாக காங்கிரஸ் பிரமுகர்கள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி பாதயாத்திரையை மகாராஷ்டிரத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கினார்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்கு பின்னர் முதல் முறையாக ராகுல் காந்தி பிஹார் செல்கிறார்.