இந்தியா

வெயிலுக்கு பலியானோர் குடும்பத்துக்கு இழப்பீடு

செய்திப்பிரிவு

கோடை வெயிலுக்கு இதுவரை 551 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ள ஆந்திர அரசு, அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு அறிவித் துள்ளது.

இது தொடர்பாக ஹைதரா பாத்தில் ஆந்திர மாநில துணை முதல்வர் சின்ன ராஜப்பா செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 13-ம் தேதியில் இருந்து இதுவரை ஆந்திர மாநிலத்தில் 551 பேர் வெயில் கொடுமையால் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக குண்டூரில் 104 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 90, விசாகப்பட்டினம் 84, விஜய நகரம் 61, காகுளம் 25, பிரகாசம் 57, நெல்லூர் 39, சித்தூர் 20, கடப்பா 13, கர்னூல் 8, மற்றும் அனந்தபூர் மாவட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத் தாருக்கு தலா ரூ. 1 லட்சம் உதவி தொகை விரைவில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே நேற்று ஆந்திர மாநிலத்தில் வெயில் கொடுமைக்கு மேலும் 26 பேர் உயிரிழந்தனர்.

SCROLL FOR NEXT